இலங்கை தமது பிரச்சினையை தாமே தீர்த்துக்கொள்ளுமானால் வெளிநாடுகளில் தலையீடு அவசியம் இல்லை என இந்திய பிரதமர் தெரிவித்துள்ளார். இந்த கருத்தை இந்திய பிரதமர் மன்மோகன்சிங், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் தெரிவித்துள்ளதாக இந்திய பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இலங்கை தமிழர் பிரச்சினையை இந்தியா வெற்றிகரமாக கையாளுமாக இருந்தால், வெளிநாட்டு தலையீடுகள் அவசியம் இல்லை என்று மன்மோகன்சிங் குறிப்பிட்டுள்ளார். இந்திய பிரதமரும் இலங்கை ஜனாதிபதியும் நேற்று முன்தினம் நியூயோர்க்கில் வைத்து சந்தித்தனர். இதன்போது வெளிநாட்டு தலையீட்டை தடுக்க இலங்கை [...]
Archive for TamilNews
குருநாகலிலும் பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம்!
குருநாகல் நகரில் இன்று காலை ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் மீது இனந்தெரியாதவர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். துப்பாக்கிப் பிரயோகம் மேந்கொண்டு விட்டு தப்பிச் சென்ற சந்தேகநபர்களை கண்டு பிடிப்பதற்கான விசாரணைகள் மேந்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ் காண்ஸ்டபிள் மற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது மேட்டார் சைக்கிலில் வந்த இனந்தெரியாதவர்கள் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியசட்சகர் மெக்ஸி ப்ரொக்டர் கூறியுள்ளார். இன்று காலை ஒன்பது மணியளவில் [...]
வென்னப்புவவில் மூன்று சடலங்கள்!
வென்னப்புவ மஹவெல மற்றும் கிரிந்திவெல ஆகிய பகுதிகளில் இருந்து மூன்று சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. வென்னப்புவ வாய்க்கால பகுதி மாஒயாவில் மிதந்துக் கொண்டிருந்த 19 வயது இளைஞனின் சடலம்கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் கதிரான வடக்கு பகுதியைச் சேர்ந்தவர் என்பது விசாரணைகளின்பொது தெரியவந்துள்ளது. சடலத்தில் வெளிக்காயங்கள் எதுவும் காணப்படவில்லை என பொலிஸார் கூறினர். இதேவேளை, மஹவெல மாரகம்முல்ல பகுதியிலுள்ள கிணறு ஒன்றினுள் இருந்து ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் கூறினர். இதனிடையே கிரிந்திவெல [...]
பொலிஸார் பரஸ்பரம் துப்பாக்கிப் பிரயோகம் அதிகாரி பலி! அம்பாறையில் சம்பவம்!
அம்பாறையில் மஹாஓயா 65ம் சந்தியில் உள்ள பொலிஸ் விசேட அதிரடிப் படை முகாமில் பொலிஸ் உதவி கண்காணிப்பு அதிகாரி ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். பொலிஸ் துணை அதிகாரி (Sub-Inspector(SI)) ஒருவரும் பொலிஸ் உதவி கண்காணிப்பு அதிகாரி ஒருவரும் (Assistant Superintendent of Police (ASP)) ஒருவருக்கு ஒருவர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்திலேயே அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார். காயங்களுடன் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் உதவி கண்காணிப்பு அதிகாரி ஒருவரும் (Assistant Superintendent of Police [...]
மன்னாரில் மீனவர்களுக்கான பாஸ் நடைமுறை கெடுபிடி தொடர்கிறது!
மன்னாரில் மீனவர்களுக்கான பாஸ் நடைமுறை நீக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துப் பல மாதங்கள் கடந்துள்ள போதிலும் அது இன்னமும் தொடர்வதாக மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். மன்னார் மாவட்டத்திலிருந்து கடலுக்குச் செல்லும் அனைத்து மீன்பிடித் துறைமுகங்களுக்கு அருகிலும் கடற்படையினரின் சோதனைச் சாவடிகள் உள்ளன. இவற்றினூடாகவே பாஸ் வழங்கப்பட்டு மீனவர்கள் தொழிலுக்குச் செல்லுகின்றனர். பாஸ் நடைமுறையால் மீனவர்களுக்குப் பாதுகாப்புக் கிடைப்பதாகக் கூறப்பட்டுள்ள போதிலும் மீனவர்கள் இதனை மறுக்கின்றனர். பாஸ் பெறுவதிலுள்ள நெருக்குவாரத்தால் பல மீனவக் குடும்பங்கள் பட்டினிச் சாவை எதிர்கொண்டு வருவதாகத் [...]
தாயையும் மகனையும் வாளால் தாக்கி கொள்ளை – யாழ் சித்தக்கேணியில் சம்பவம்!
யாழ். சித்தங்கேணி கீரிமலை வீதியில் உள்ள வீடு ஒன்றில் வீட்டின் கூரையைப் பிரித்து உள்ளே நுழைந்த கொள்ளையர் குழு, வீட்டிலிருந்த தாயையும் மகனையும் வாளால் வெட்டிவிட்டு கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக வட்டுக் கோட்டை பொலிஸார் தெரிவித்தனர். இன்று அதிகாலை 1.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இக் கொள்ளையர்கள் வீட்டிலிருந்த தங்க ஆபரணங்களையும் பெறுமதியான இலத்திரனியல் சாதனங்களையும் கொள்ளையடித்து விட்டு தலைமறைவாகியுள்ளதாக வட்டுக் கோட்டை பொலிஸார் கூறினர். கொள்ளையரின் வாள்வெட்டிற்கு இலக்காகிய சுந்தரலிங்கம் மங்கையக்கரசி, அவரின் மகன் சுந்தரலிங்கம் ராஜன் [...]
இலங்கை குறித்து ஐ.நா பொது அமர்வில் விவாதிக்க சாத்தியமில்லை – இந்தியா!
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையம் எழுப்பிய குற்றச்சாட்டுகள் குறித்து ஐ.நா. சபையின் பொதுக்குழுவில் விவாதிக்க சாத்தியக்கூறு இல்லை என இந்தியா தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ஹர்தீப் சிங் பூரி இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.. தருசுமான் அறிக்கை, சில அரச சார்ப்பற்ற அமைப்புகளின் குற்றச்சாட்டுகள், சனல் 4 தொலைக்காட்சியின் காணொளிகள், போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு இலங்கைக்கு எதிரான பிரேரணையொன்றும் மனிதவுரிமைகள் ஆணையத்தின் நிகழ்ச்சி நிரலிலும் அண்மையில் சேர்க்கப்படுவதற்கு முயற்சிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தற்போது [...]
மன்மோகன் சிங்கை சந்தித்தார் மகிந்தா ..!
அமெரிக்கா நியூ யோர்க்கில் இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ச இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து இருதரப்பு பேச்சுக்களில் ஈடுபட்டார் . இதன் போது பேசபட்ட விடயங்கள் தொடர்பாக தெரியவரவில்லை ..!
ஐரோப்பாவுக்குள் நுழைவதற்கு மேஜர் ஜெனரல் ஜெகத்டயசுக்கு தடை ..!
சுவிசுக்கான இலங்கையின் முன்னாள் துணை தூதர் மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ்,இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டு இடம்பெற்ற யுத்தத்தின் போது புரிந்த போற்குற்றங்களிற்கு அமைய அவரை கைது செய்வதற்கான ஆணை பிறப்பிக்க பட்டுள்ளது . சுவிஸ் நாட்டில் இவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மனித உரிமை அமைப்புக்களும் பங்கெடுத்து இவர் புரிந்த போர்குற்ற ஆதாரத்தினை சமர்பித்ததை அடுத்தே இவர் ஐரோப்பா நாடுகளில் நுழைந்தால் அங்கு வைத்து கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது . [...]
50 மாணவிகள் மயங்கிய நிலையில் கோப்பாய் வைத்தியசாலையில்!
கோப்பாய் கல்வியல் கல்லூரியில் 20 மாணவிகள் மயங்கிய நிலையில் கோப்பாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் . இது தொடர்பாக சுகாதாரப்பிரிவிடம் மாறுபட்ட பல குழப்பமான நிலையில் கல்லூரி வட்டாரங்கள் பதிலளித்ததாகவும் கல்லூரி வட்டாரங்கள் மதிய உணவை கூட அனுப்பாமல் அத்தனை மாணவிகளும் கைவிடப்பட்டவர்கள் போன்றுவிட்ப்பட்ட சுகாதாரப்பரிசோதகர்கள் துருவி ஆராய்ந்ததாகவும் தரமற்ற உணவு வழங்கல் இதன் பின்னனியில் உள்ளதால் கல்லூரி கடும் மௌனமாகிவிட்டதாக அறியப்படுகின்றது . இதைவிட பல மாணவர்கள் பாதிக்கப்பட்டதாகவும் சுமார் 50ற்கு மேற்பட்டவர்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டடிருப்பார்கள் எனவும் [...]

